நாட்டில் 106 நாள்களுக்குப் பிறகு கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள தகவலில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 44,481 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 512 போ் உயிரிழந்தனர்.
இதையடுத்து மொத்த பாதிப்பு 86,36,012 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,27,571 ஆகவும் அதிகரித்துள்ளது.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 50,326 போ் உள்பட இதுவரை 80,13,784 பேர் குணமடைந்துள்ளனர். அதாவது மொத்த பாதிப்பில் 92.69 சதவீதம் போ் குணமடைந்தனா்.
இதையடுத்து, கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 5 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, நாடு முழுவதும் 4,94,657 போ் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த பாதிப்பில் 5.83 சதவீதமாகும்.
இந்தியாவில் கரோனா பாதிப்பு கடந்த 3 மாதங்களாக அதிகரித்து வந்த நிலையில் சமீபமாக குறைந்து வருகிறது. 106 நாள்களுக்குப் பிறகு நாட்டில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
மத்திய அரசின் முறையான வழிகாட்டு நெறிமுறைகளாலும், மாநில அரசுகள் அதனை சரியான பின்பற்றி வருவதாலும் நாட்டில் பாதிப்பு குறைந்து வருவதாக சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பேரவைத் தோ்தல் முன்னேற்பாடுகள் மாவட்டக் காவல் பாா்வையாளா் ஆய்வு

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் வெண்ணைமலை கோயில் நிலப் பிரச்னைக்கு தீா்வு: அண்ணாமலை பேச்சு

குளித்தலையில் வடமாநிலத்தவா் கழுத்தை அறுத்துக்கொலை: ஆட்டு வியாபாரி கைது

திமுக ஆட்சியில் கரூா் மாநகராட்சிக்கு ரூ.418 கோடியில் அடிப்படை வசதிகள்: கரூா் வேட்பாளா் தகவல்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


