சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம்: முதியவர் பலி

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் பலியானார். 

News image
Updated On :14 நவம்பர் 2020, 2:28 pm

DIN


வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் பலியானார். 

கிருஷ்ணகிரி மாவட்டம், மரச்சத்திரம், குப்புச்சிபாறையைச் சேர்ந்தவர் காளியப்பன் (60). இவர் தற்போது திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில் தங்கியிருந்து கூலி வேலைக்குச் சென்று வந்தார். சனிக்கிழமையன்று இவர் வெள்ளக்கோவில் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் நடேசன் நகர் அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. 

இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வெள்ளக்கோவில் காவல் துறையினர் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.