பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பிகாரில் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார் நிதீஷ் குமார்

பிகாரில் ஆட்சியமைப்பதற்காக ஆளுநர் பிகு செளஹானிடம் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிதீஷ் குமார் உரிமை கோரினார்.

News image
பிகாரில் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார் நிதீஷ் குமார் (கோப்புப்படம்)
Updated On :15 நவம்பர் 2020, 9:26 am

DIN

பாட்னா: பிகாரில் ஆட்சியமைப்பதற்காக ஆளுநர் பிகு செளஹானிடம் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிதீஷ் குமார் உரிமை கோரினார்.

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ஜ.க. 74 இடங்களையும், ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களையும் கைப்பற்றியது.

குறைந்த இடங்களை கைப்பற்றியிருந்தாலும், ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த நிதீஷ் குமாரே முதல்வராக நீடிப்பார் என்று பாஜக அறிவித்திருந்தது.

இந்த நிலையில் பிகார் மாநிலம் பாட்னாவில் நிதீஷ் குமார் இல்லத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்களின் கூட்டம் இன்று நடைபெற்றது.

கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனை மேற்கொண்டனர்.

ஆலோசனையின் இறுதியில் ஐக்கிய ஜனதா தளக் கட்சியை (ஜே.டி.யு) சேர்ந்த நிதீஷ் குமாரையே மீண்டும் முதல்வராக தேர்வு செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்களுடனான ஆலோசனையில் பிகார் முதல்வராவது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஆளுநர் பகு செளஹானிடம் ஆட்சியமைக்க நிதீஷ் குமார் உரிமைக் கோரினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.