எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி

செளதி அரேபியாவில் நடைபெற உள்ள ஜி-20 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளதாக வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

News image
ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி
Updated On :19 நவம்பர் 2020, 4:28 pm

DIN

செளதி அரேபியாவில் நடைபெற உள்ள ஜி-20 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளதாக வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

நவம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் செளதி அரேபியா தலைமையில் 21 ஆம் நூற்றாண்டில் அனைவருக்குமான வாய்ப்புகளை உணர்ந்துகொள்வது என்ற கருப்பொருளின் கீழ் பல்வேறு நாட்டுத் தலைவர்கள் பங்கேற்கும் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் மோடிக்கு அதிகாரப்பூர்வ அழைப்பை செளதி மன்னர் சல்மான் பின் அப்துல்ஸீஸ் அல் சவுத் விடுத்திருந்தார்.

இந்நிலையில் நடைபெற உள்ள ஜி-20 உச்சி மாநாட்டில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி கலந்து கொள்வார் என வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா வியாழக்கிழமை தெரிவித்தார்.

இந்த ஜி-20 உச்சிமாநாட்டின் போது, ​​உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரையும் உள்ளடக்கிய, நிலையான மற்றும் நெகிழ்ச்சியான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான தங்கள் பார்வையைப் பகிர்ந்து கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.