தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

5ஆவது முறையாக ஏர் இந்திய விமானங்களுக்கு தடை விதித்த ஹாங்காங்

இந்தியப் பயணிகளுக்கு கரோனா உறுதியாவதாகக் கூறி ஐந்தாவது முறையாக ஏர் இந்தியா விமானங்களுக்கு டிசம்பர் 3ஆம் தேதி வரை ஹாங்காங் அரசு தடை விதித்துள்ளது.

News image
5ஆவது முறையாக இந்திய விமானங்களுக்கு தடை விதித்த ஹாங்காங்
Updated On :21 நவம்பர் 2020, 10:22 am

DIN

இந்தியப் பயணிகளுக்கு கரோனா உறுதியாவதாகக் கூறி ஐந்தாவது முறையாக ஏர் இந்தியா விமானங்களுக்கு டிசம்பர் 3ஆம் தேதி வரை ஹாங்காங் அரசு தடை விதித்துள்ளது.

ஜூலை மாதம் ஹாங்காங் அரசு விதித்த விதிகளின்படி, பயணத்திற்கு 72 மணிநேர முன்னதாக மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கரோனா தொற்று உறுதியாகாத சான்றிதழ் இருந்தால் மட்டுமே இந்தியாவில் இருந்து பயணிகள் ஹாங்காங்கிற்கு வர முடியும்.

இந்நிலையில் தில்லியிலிருந்து ஹாங்காங் சென்ற இந்திய விமானத்தில் பயணித்த 14 பயணிகளுக்கு கரோனா தொற்று உறுதியானதாக ஹாங்காங் அரசு தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து டிசம்பர் 3ஆம் தேதி வரை ஏர் இந்தியா விமானங்களுக்கு ஹாங்காங் அரசு தடை விதித்துள்ளது. ஏர் இந்தியா விமானங்களுக்கு ஹாங்காங் அரசு தடை விதிப்பது இது 5ஆவது முறையாகும்.

முன்னதாக செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 3, ஆகஸ்ட் 18 முதல் ஆகஸ்ட் 31 மற்றும் அக்டோபர் 17 முதல் அக்டோபர் 30 வரையிலான தேதிகளில் ஏர் இந்தியா விமானங்களுக்கு ஹாங்காங் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.