வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

ஜம்மு-காஷ்மீர்: எல்லையில் ராணுவ வீரர் தற்கொலை

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

News image
ஜம்மு-காஷ்மீர்: எல்லையில் ராணுவ வீரர் தற்கொலை (கோப்புப்படம்)
Updated On :22 நவம்பர் 2020, 10:50 am

DIN


ஜம்மு-காஷ்மீர் எல்லையில் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ஜம்மு - காஷ்மீர் எல்லைப் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ஜம்மு-காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்திலுள்ள சலூட்ரி எல்லைப் பகுதியில்  
ராணுவ வீரர் ராஜீந்தர் குமார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில், பணியின்போது இன்று காலை 8.25 மணியளவில் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு அவர் தற்கொலை செய்துகொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

ரத்தக் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில், அங்கு அவர் உயிரிழந்தார்.

ராணுவ வீரரின் தற்கொலைக்கான காரணம் குறித்து தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.