மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

தில்லி சுற்றுச்சூழல் அமைச்சருக்கு கரோனா

தில்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய்-க்கு வியாழக்கிழமை  கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

தில்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் (கோப்புப்படம்)

Updated On :26 நவம்பர் 2020, 6:06 am

தில்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய்-க்கு வியாழக்கிழமை  கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், ''ஆரம்பகட்ட அறிகுறிகளைத் தொடர்ந்து கரோனா பரிசோதனை செய்துகொண்டதில், எனக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. எனினும் அவர் குணமடைந்து திரும்பினார்.

தில்லியில் நேற்று (புதன்கிழமை) மட்டும் 5,246 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 5,361 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 99 பேர் பலியாகினர்.

தில்லியில் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,45,787-ஆக அதிகரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.