எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்
ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டனர்.


ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டனர்.
ஜம்மு-காஷ்மீரின் எல்லைக் கோடுப் பகுதியில் பாகிஸ்தான் தொடா்ந்து அத்துமீறிய தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 4,000க்கும் அதிகமான முறை பாகிஸ்தான் படையினா் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனா்.
இது, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அதிகமான அளவாகும். கடந்த ஆண்டில் 3,289 முறை பாகிஸ்தான் படையினா் தாக்குதல் நடத்தினா்.
இந்த நிலையில் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிர்னி மற்றும் கஸ்பா ஆகிய பகுதிகளில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று அத்துமீறித் தாக்குதல் நடத்தினர்.
சிறிய ரக குண்டுகள் வீசியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு இந்திய ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்தது. இருப்பினும், இந்த சண்டையில் இந்திய தரப்புக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.
கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு இதே பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...