சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

கரோனா: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 41,322 பேர் பாதிப்பு; 485 பேர் பலி

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றுக்கு புதிதாக 41,322 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், அதே கால அளவில் 485 பேர் உயிரிழந்துள்ளனர். 

News image
Updated On :28 நவம்பர் 2020, 4:58 am

DIN

புது தில்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றுக்கு புதிதாக 41,322 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், அதே கால அளவில் 485 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

சனிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 41,322 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 93,51,110-ஆக அதிகரித்தது.

இதேபோல், கரோனாவில் இருந்து ஒரே நாளில் 41,452 பேர் குணமடைந்தனர். இவர்களுடன் சேர்த்து கரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 87,59,969-ஆக அதிகரித்தது.

நாடு முழுவதும் 4,54,940 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த பாதிப்பில் 4.87 சதவீதமாக குறைந்துள்ளது. 

கரோனா தொற்றுக்கு மேலும் 485 பேர் உயிரிழந்ததால், இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,36,200-ஆக அதிகரித்தது. அதாவது, உயிரிழப்பு விகிதம் 1.46 சதவீதமாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.