மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

ஹிமாசலில் இரவு நேர முழுமுடக்கம்: முதல்வர் ஆலோசனை

ஹிமாசலில் கரோனா தொற்று அதிகமாக உள்ள 4 மாவட்டங்களில் மட்டும் இரவு நேர முழு முடக்கம் அறிவிப்பது குறித்து உயர்மட்ட அதிகாரிகளுடன் முதல்வர் ஜெய் ராம் தாக்குர் ஆலோசனை மேற்கொண்டார்.

News image

ஹிமாசல் முதல்வர் ஜெய் ராம் தாக்குர் (கோப்புப்படம்)

Updated On :28 நவம்பர் 2020, 11:29 am

ஹிமாசலில் கரோனா தொற்று அதிகமாக உள்ள 4 மாவட்டங்களில் மட்டும் இரவு நேர முழு முடக்கம் அறிவிப்பது குறித்து உயர்மட்ட அதிகாரிகளுடன் முதல்வர் ஜெய் ராம் தாக்குர் ஆலோசனை மேற்கொண்டார்.

ஹிமாசலில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்கும் வகையில் உயர்மட்ட அதிகாரிகளுடன் முதல்வர் ஜெய் ராம் தாக்குர் ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் பேசிய அவர், ஹிமாசலில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால், டிசம்பர் 15-ஆம் தேதி வரை மாநில அரசு அலுவலர்கள் 5 நாள்கள் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்ய வேண்டும் என்றும், 6 நாள்கள் வீட்டில் இருந்தபடி வேலை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மேலும், கரோனா பரவல் அதிகமாக உள்ள சிம்லா, மண்டி, குலு, மற்றும் காங்க்ரா ஆகிய மாவட்டங்களில் இரவு 9 மணி முதல் காலை 6 மணிவரை முழு முடக்கம் அறிவிக்க வேண்டும் என்று ஆலோசனை நடத்தப்பட்டதாகக் கூறினார்.

முன்னதாக மாநிலம் முழுவதும் டிசம்பர் 31-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிலையங்களை திறக்கக் கூடாது என்று ஹிமாசல அரசு உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.