ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பிகாரில் ஜேடியு எம்எல்ஏ உதவியாளர் சுட்டுக் கொலை

பிகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம்(ஜேடியு) கட்சி எம்எல்ஏ அமரேந்திர பாண்டேவின் உதவியாளர் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். 

News image
பிகாரில் ஜேடியு எம்எல்ஏ உதவியாளர் சுட்டுக் கொலை
Updated On :29 நவம்பர் 2020, 4:21 am

DIN


கோபால்கஞ்ச்: பிகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம்(ஜேடியு) கட்சி எம்எல்ஏ அமரேந்திர பாண்டேவின் உதவியாளர் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். 

பிகார் மாநிலம் கோபால்கஞ்சியில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் அமரேந்திர பாண்டேவின் உதவியாளர் சனிக்கிழமை மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். 

இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக இரண்டு பேரை கைது செய்துள்ள காவல்துறையினர்,  வழக்குப் பதிவு செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

பிகாரில் ஆட்சி அமைந்த சில நாள்களிலேயே எம்எல்ஏவின் உதவியாளர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம்  மாநிலத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.