/

கரோனா இறப்புகள் 10 லட்சத்தைத் தாண்டியிருக்கலாம்: உலக சுகாதார நிறுவனம்

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியிருக்கலாம் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் புதன்கிழமை தெரிவித்தார்.

News image

உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் அதானோம் கெப்ரேயஸ்

Updated On :1 அக்டோபர் 2020, 11:36 am

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியிருக்கலாம் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் புதன்கிழமை தெரிவித்தார்.

ஜெனீவாவில் புதன்கிழமை நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்சபை உயர்மட்டக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ், "இந்த கரோனா வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை நிச்சயமாக 10 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கலாம்.” எனத் தெரிவித்தார்.

மேலும், “ஆயிரக்கணக்கானோர் உலகெங்கிலும் உள்ள மருத்துவமனைகளில் தங்கள் உயிர்களுக்காக போராடி வருகிறார்கள்." எனக் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸ், கரோனா சோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்கான நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கும், தடுப்பூசி தயாரிப்பிற்கான ஆதரவை வழங்குவதற்கும் உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

உலகம் முழுவதும் இதுவரை 3 கோடியே 42 லட்சத்து 2 ஆயிரத்து 808 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 19 ஆயிரத்து 582 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.