நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 86,821 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,181-ஆக அதிகரித்துள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. கரோனா பரிசோதனை எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளதால். தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ''கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 86,821 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு 9,40,705 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா தொற்றிலிருந்து 52,73,201 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,181 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 98,678-ஆக அதிகரித்துள்ளது.
இதனால் கரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் 83.53 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. கரோனா வைரஸ் தொற்றால் இறப்போர் விகிதம் 1.56 சதவிகிதமாக குறைந்துள்ளது.
நாட்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் அதிக அளவிலான கரோனா பாதிப்புகள் பதிவாகிவருகிறது. மகாராஷ்டிரத்தில் 13,84,446 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 36,662 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பலியாகியுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக ஆந்திரம், தமிழகம், கர்நாடகம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன'' இவ்வாறு சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு: யாருக்கு லாபம்?

விவசாயிகளின் கனவு: சுசீந்திரம் பழையாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்படுமா?
உதகை தொகுதியில் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறுமா காங்கிரஸ்?

கா்நாடக துணை முதல்வருடன் ஸ்டாலின் பிரசாரம் செய்வது துரோகம்: எடப்பாடி பழனிசாமி பேச்சு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


