மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

சராசரியாக ஒரு நாளில் 87 பாலியல் பலாத்கார சம்பவங்கள்

நாட்டில் சராசரியாக ஒரு நாளில் 87 பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடப்பதாக குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

News image
சராசரியாக ஒரு நாளில் 87 பாலியல் பலாத்கார சம்பவங்கள்
Updated On :2 அக்டோபர் 2020, 9:41 am

DIN

புது தில்லி: 2019-ஆம் ஆண்டில் நாட்டில் சராசரியாக ஒரு நாளில் 87 பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடப்பதாக குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

2019-ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக 4,05,861 வன்முறை சம்பவங்கள் காவல்நிலையங்களில் பதிவாகியுள்ளது. இது கடந்த 2018-ஆம் ஆண்டைக் காட்டிலும் 7 சதவீதம் அதிகம் என்றும் மத்திய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டிருக்கும் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் பட்டியலினப் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பலியான சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இந்த புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

2018-ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக 3,78,236 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 33,356 பாலியல் பலாத்கார வழக்குகள் அடங்கும்,  இது 2017-ஆம் ஆண்டு பதிவான 32,559 பாலியல் பலாத்கார வழக்குகளைக் காட்டிலும் அதிகமாகும். 2019-ஆம் ஆண்டில் மட்டும் 32,003 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகியுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.