ஜம்மு-காஷ்மீரில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கைதிகளை தனிமைப்படுத்தி கண்காணிக்க புதிதாக தற்காலிக சிறைகள் அமைக்கப்படும் என்று சிறைத்துறை இயக்குநர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் ஜம்மு பகுதியில் அதிக அளவிலான கரோனா பாதிப்புகள் பதிவாகி வருகிறது. ஜம்மு பகுதியில் அதிக அளவிலான சிறைக்கைதிகளும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து பேசிய சிறைத்துறை இயக்குநர் வி.கே.சிங், ''காஷ்மீர் பகுதியில் உள்ள அனந்தநாக் மற்றும் ஸ்ரீநகர் மத்திய சிறையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட கைதிகளில் 200 கைதிகள் குணமடைந்துள்ளனர்.
எனினும் கடந்த சில வாரங்களாக ஜம்மு பகுதியில் உள்ள அம்பாலா சிறையில் 56 பேருக்கும், கத்துவா சிறையில் 51 பேருக்கும், ரஜோரி பகுதி சிறையில் 50 பேருக்கும், படேர்வா பகுதி சிறையில் 24 பேருக்கும் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கரோனாவால் பாதிக்கப்படும் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க தொற்று அதிகம் உள்ள இடங்களில் தற்காலிக சிறை அமைக்கப்படும். இதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தற்காலிக சிறையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி கண்காணிப்பதன் மூலம் மற்ற கைதிகளுக்கு கரோனா பரவுவது தடுக்கப்படும்'' என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோ்தல் வாக்குறுதிகள் எதையும் திமுக நிறைவேற்றவில்லை! - நயினாா் நாகேந்திரன் பிரசாரம்
தினப்பலன்கள் - தனுசு
தினப்பலன்கள் - மிதுனம்
தினப்பலன்கள் - கும்பம்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


