தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மகாராஷ்டிரத்தில் புதிதாக 190 காவலர்களுக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 190 காவலர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

News image

மகாராஷ்டிரத்தில் புதிதாக 190 காவலர்களுக்கு கரோனா

Updated On :3 அக்டோபர் 2020, 8:15 am

DIN

மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 190 காவலர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் அதிக அளவில் கரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.

கரோனா தொற்றால் மருத்துவர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்பட முன்களப் பணியாளர்கள் பலர் பாதிக்கப்படுகின்றனர். அந்தவகையில் மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 190 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 23,879-ஆக அதிகரித்துள்ளது. கரோனாவிலிருந்து 20,871 காவலர்கள் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 2,758 காவலர்கள் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கரோனாவால் புதிதாக 2 காவலர்கள் உயிரிழந்த நிலையில், இதுவரை  கரோனாவால் பலியான காவலர்களின் எண்ணிக்கை 250-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.