/

ஒடிசாவில் புதிதாக 3,053 பேருக்கு கரோனா; மேலும் 17 பேர் பலி

ஒடிசாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,053 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

News image

ஒடிசாவில் புதிதாக 3,053 பேருக்கு கரோனா; மேலும் 17 பேர் பலி

Updated On :3 அக்டோபர் 2020, 7:08 am

ஒடிசாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,053 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ஒடிசாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இது தொடர்பாக ஒடிசா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ''கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,053 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  இதனால் மொத்த பாதிப்பு  2,29,387-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை  34,314 -ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றிலிருந்து 1,94,128 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 17 பேர் உயிரிழந்ததால், மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 892-ஆக அதிகரித்துள்ளது'' என்று சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.