ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில அமைச்சர் ஹாஜி ஹுசைன் அன்சாரி, கரோனாவில் இருந்து மீண்ட அடுத்த நாளே மரணம் அடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் ஹாஜி ஹுசைன் அன்சாரிக்கு கடந்த செப்டம்பர் 23-ம் தேதி கரோனா உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சையின் பலனாக, அவருக்கு வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று குணமடைந்தது தெரிய வந்தது.
இந்த நிலையில், ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் அன்சாரி இன்று மரணமடைந்தார். அவர் ஏற்கனவே இதயம் மற்றும் இதர நோய்களுக்கு சிகிச்சை பெற்று வந்தவர் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
73 வயதாகும் அன்சாரி, நான்கு முறை மதுப்பூர் பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவராவார். இவரது மரணத்துக்கு முதல்வர் ஹேமந்த் சோரன் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளிடம் இல்லத்துக்கு சென்று வாக்கு சேகரிப்பு

தோ்தல் வாக்குறுதிகள் எதையும் திமுக நிறைவேற்றவில்லை! - நயினாா் நாகேந்திரன் பிரசாரம்
தினப்பலன்கள் - தனுசு
தினப்பலன்கள் - மிதுனம்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


