தெலங்கானாவில் சனிக்கிழமை நிலவரப்படி புதிதாக 1,718 பேர் கரோனா கண்டறியப்பட்டுள்ளதாக என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தெலங்கானாவில் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக தெலங்கானா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த 24 மணிநேரத்தில் 1,718 பேர் கரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். 2,002 பேர் குணமடைந்த நிலையில், நோயிலிருந்து மீண்டோரின் மொத்த எண்ணிக்கை 1,67,846 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் மீட்பு விகிதம் தேசிய சராசரியான 83.8 சதவீதத்திலிருந்து 85.05 சதவீதமாக உயர்ந்தது.
மேலும் ஒரே நாளில் 8 பேர் கரோனாவுக்கு பலியானதை தொடர்ந்து, மொத்த இறப்பு எண்ணிக்கை 1,153 ஆக உயர்ந்துள்ளது. இதன்படி, இறப்பு விகிதம் தேசிய சராசரியான 1.6 சதவீதத்திலிருந்து 0.58 சதவீதமாக உள்ளது.
புதிதாக பாதிக்கப்பட்டவர்களை தொடர்ந்து தெலங்கானா மாநிலத்தில் 1,97,327 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இதில் 28,328 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
கடந்த இரண்டு நாள்களில் 49,084 மாதிரிகளின் சோதனைகளை நடத்தியுள்ளது. இதன் மூலம் அரசு இதுவரை 31,53,626 மாதிரிகளை பரிசோதித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு: யாருக்கு லாபம்?

விவசாயிகளின் கனவு: சுசீந்திரம் பழையாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்படுமா?
உதகை தொகுதியில் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறுமா காங்கிரஸ்?

கா்நாடக துணை முதல்வருடன் ஸ்டாலின் பிரசாரம் செய்வது துரோகம்: எடப்பாடி பழனிசாமி பேச்சு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


