ஒடிசாவில் 3,000 க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
கரோனா பொதுமுடக்க காலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வங்கிகள் செயல்பட்டன. கரோனா முன்களப் பணியாளர்களின் வரிசையில் வங்கி ஊழியர்கள் அதிகமானோருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் இதுவரை 3,066 வங்கி ஊழியர்களுக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு வெளியிட்டுள்ள தகவலில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் இதுவரை அதிகபட்சமாக 968 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆக்சிஸ் வங்கியில் 390 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுப்படி, ஒடிசாவில் 30,301 பேர் கரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 1,98,194 பேர் குணமடைந்த அதேநேரத்தில் 892 பேர் உயிரிழந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

என் வாழ்வில் மறக்க முடியாத இடத்தில் இருப்பவர் ஆஷா போஸ்லே: இளையராஜா

ஐபிஎல் ரீவைண்ட்: அறிமுக சீசனில் சிஎஸ்கேவை வீழ்த்தி கோப்பையை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ்!

ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிடுவோம்! டிரம்ப் எச்சரிக்கை!

விண்டோஸ் இயங்குதள பயன்பாட்டைக் கைவிடும் பிரான்ஸ்!
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


