புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

மகாராஷ்டிரத்தில் புதிதாக 132 காவலர்களுக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 132 காவலர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

மாராஷ்டிரத்தில் புதிதாக 132 காவலர்களுக்கு கரோனா

Updated On :7 அக்டோபர் 2020, 9:33 am

மும்பை: மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 132 காவலர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதில் மகாராஷ்டிரத்தில் அதிக அளவிலான கரோனா பாதிப்புகள் பதிவாகி வருகிறது. 

கரோனா தொற்றுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்பட முன்களப் பணியாளர்கள் பலர் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில் மகாராஷ்டிரத்தில் புதிதாக 132 காவலர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இதுவரை மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 24,386-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றிலிருந்து 21,593 காவலர்கள் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில்,  2,536 காவலர்கள் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 4 காவலர்கள் உயிரிழந்ததால், இதுவரை கரோனாவால் பலியான காவலர்களின் எண்ணிக்கை 257-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.