புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

ஒடிசாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா

ஒடிசாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,995 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது. 

News image

ஒடிசாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா

Updated On :7 அக்டோபர் 2020, 7:26 am

ஒடிசாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,995 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது. 

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ஒடிசாவில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக ஒடிசா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ''கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,995 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 2,40,998-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு 29,770 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கரோனாவிலிருந்து மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 2,10,217-ஆக அதிகரித்துள்ளது. கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு 924 பேர் உயிரிழந்தனர்'' என்று சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.