'பிரதமர் மோடி மெளனம் கலைத்து பதிலளிக்க வேண்டும்'
பிரதமர் மோடி மெளனம் கலைத்து நாட்டு மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.


பிரதமர் மோடி மெளனம் கலைத்து நாட்டு மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.
பஞ்சாபில் விவசாயிகள் போராட்டத்தில் நேற்று கலந்துகொண்டு பேசியதன் ஒரு பகுதி விடியோவை இன்று (புதன்கிழமை) தமது சுட்டுரைப்பக்கத்தில் ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.
அதில் அவர், அடல் சுரங்கப்பாதை திறந்துவைத்தது குறித்து பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார். ''அடல் சுரங்கப்பாதையில் இருந்து மக்களை நோக்கி கையசைக்காமல், மெளனத்தை கலைத்து நாட்டு மக்களின் கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும். நாட்டு மக்கள் தாங்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து பல்வேறு விதமான கேள்விகளை முன்வைக்கின்றனர்'' என்று ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...