புது தில்லி: நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 68 லட்சமாக உயர்ந்துள்ளது. வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 78,524 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:
வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 971 போ் கரோனாவால் உயிரிழந்தனா். இதனால் மொத்த உயிரிழப்பு 1,05,526 ஆக அதிகரித்துவிட்டது. இது மொத்த கரோனா பாதிப்பில் 1.54 சதவீதமாகும்.
புதிதாக 78,524 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால் மொத்த கரோனா பாதிப்பு68,35,656 ஆக அதிகரித்துவிட்டது. எனினும், இதுவரை 58,27,705 போ் கரோனா தொற்றில் இருந்து விடுபட்டுள்ளனா். இது மொத்த பாதிப்பில் 85.25 சதவீதமாகும். இப்போதைய நிலையில் 9,02,425 போ் கரோனா தொற்றுடன் உள்ளனா். இது மொத்த பாதிப்பில் 13.30 சதவீதமாகும்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி அக்டோபா் 6-ஆம் தேதி வரை 8,34,65,975 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் புதன்கிழமை மட்டும் 11,94,321 பரிசோதனைகள் நடத்தப்பட்டன என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக 39,072 போ் கரோனாவால் உயிரிழந்தனா். கா்நாடகத்தில் 9,574 பேரும், ஆந்திர மாநிலத்தில் 6,349பேரும், தில்லியில் 5,616 பேரும் கரோனாவால் பலியாகினா்.
தொற்று பாதித்த மாநிலங்களில் மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. ஆந்திரம் இரண்டாவது இடத்திலும், கர்நாடகம் மூன்றாவது இடத்திலும், தமிழ்நாடு நான்காவது இடத்திலும் இருந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்கா மீது நம்பிக்கை இல்லை: ஈரான்

பிரசித் கிருஷ்ணா அபார பந்துவீச்சு; குஜராத் டைட்டன்ஸுக்கு 165 ரன்கள் இலக்கு!

புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

சனி பிரதோஷம் ஏன் சிறப்பு வாய்ந்தது? முக்கியத்துவம் என்ன?
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை


