மகாராஷ்டிரத்தில் புதிதாக 195 காவலர்களுக்கு கரோனா
மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 195 காவலர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Maharashtra: 195 more cops test positive for COVID-19

Maharashtra: 195 more cops test positive for COVID-19
மும்பை: மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 195 காவலர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதில் மகாராஷ்டிரத்தில் அதிக அளவிலான கரோனா பாதிப்புகள் பதிவாகி வருகிறது.
கரோனா தொற்றுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்பட முன்களப் பணியாளர்கள் பலர் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில் மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 195 காவலர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இதுவரை மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 24,581-ஆக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்றிலிருந்து 21,862 காவலர்கள் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 2,462 காவலர்கள் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை கரோனாவால் பலியான காவலர்களின் எண்ணிக்கை 257-ஆக அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...