தில்லி: கரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான ஓவியப் போட்டி
தில்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப்படையினரால் ஓவியப் போட்டி நடத்தப்பட்டது.


தில்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப்படையினரால் ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. இதில் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டனர்.
தில்லியில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப்படையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தில்லியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு கரோனா நோயாளிகளுக்காக பிரம்மாண்ட யோகாசனப் பயிற்சி நடத்தப்பட்டது. இதில் ஏராளமான கரோனா நோயாளிகள் பங்குபெற்று யோகாசனம் செய்தனர்.
இதேபோன்று கரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் ஓவியப் போட்டி நடத்தப்பட்டது.
தில்லியில் கரோனா நோயாளிகளை கண்காணித்து வரும் சர்தார் படேல் கரோனா தடுப்பு மையம் மற்றும் மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டு ஓவியங்களை வரைந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...