தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

இந்தியாவில் 2020 இறுதிக்குள் 13.9 லட்சமாக அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்புகள்

2020ஆம் ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் புற்றுநோய் பாதிப்புகளின் எண்ணிக்கை 13.9 லட்சமாக உயரும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

News image
2020 இறுதியில் நாடு முழுவதும் 13.9 லட்சமாக அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்புகள்
Updated On :9 அக்டோபர் 2020, 11:06 am

DIN

2020ஆம் ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் புற்றுநோய் பாதிப்புகளின் எண்ணிக்கை 13.9 லட்சமாக உயரும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நாட்டில் புற்றுநோய் குறித்த அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளது. 

பெங்களூருவின் ஐ.சி.எம்.ஆர் மற்றும் தேசிய நோய் தகவல் மற்றும் ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள தேசிய புற்றுநோய் பதிவு திட்டம் (என்.சி.ஆர்.பி) அறிக்கை 2020-இல், தற்போதைய தரவுகளின் அடிப்படையில் 2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் நாடு முழுவதும் 13.9 லட்சம் புற்றுநோய்கள் ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டளவில் நாட்டில் புற்றுநோய் பாதிப்புகளின் எண்ணிக்கை 15.7 லட்சமாக அதிகரிக்கும் என்றும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான தகவலை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தனது சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.