கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஊதியம் வழங்கக்கோரி தில்லியில் தீவிரமடையும் மருத்துவர்கள் போராட்டம்

தில்லி மருத்துவமனையில் கடந்த ஜூன் மாதம் முதல் ஊதியம் வழங்காததை கண்டித்து மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

News image
பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள்
Updated On :10 அக்டோபர் 2020, 11:23 am

DIN

தில்லி மருத்துவமனையில் கடந்த ஜூன் மாதம் முதல் ஊதியம் வழங்காததை கண்டித்து மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வடக்கு தில்லியில் மாநகராட்சியின் மிகப்பெரிய மருத்துவமனையான ஹிந்து ராவ் மருத்துவமனையில் கடந்த ஜூன் மாதம் முதல் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும், மருத்துவப் பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனைக் கண்டித்து கடந்த 6-ஆம் தேதி முதல் பணியை புறக்கணித்து  மருத்துவர்கள் வளாகத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஜூன் மாதத்திலிருந்து ஊதியம் வழங்கவில்லை என்றும், ஊதியம் வழங்கவில்லை என்றால் இனி பணியில் ஈடுபட இயலாது என்றும் மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

Story image

ஊதியம் வழங்காததால், பொருளாதார ரீதியில் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாகவும், இது குறித்து கடிதம் மூலம் வலியுறுத்தியும் மருத்துவமனை நிர்வாகம் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதால் மருத்துவர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஊதியத்தை வழங்காமல் தில்லி மாநகராட்சி இழுத்தடிப்பு செய்து வருவதாகவும், தில்லி அரசு நிதியை ஒதுக்கவில்லை என்று மாநகராட்சித் தரப்பில் பதிலளிக்கப்படுவதாகவும் மருத்துவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.