காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

தில்லி: ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்ட 17 பேர் கைது

தில்லியில் ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்ட 17 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த பொருள்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

News image
தில்லி: ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்ட 17 பேர் கைது
Updated On :10 அக்டோபர் 2020, 9:31 am

DIN

தில்லியில் ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்ட 17 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த பொருள்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தெற்கு தில்லியில் உள்ள திவில் பகுதியில் ஐ.பி.எல். சூதாட்டத்தில் இளைஞர்கள் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்ட சாரய் பகுதி காவல்துறையினர் ஐ.பி.எல். சூதாட்டம் மற்றும் பந்தயத்தில் ஈடுபடுவது தெரியவந்தது.

தில்லி மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியை நேரலையாக பார்த்தவாறு வரைபடம், சீட்டு விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு முறைகளில் சூதாட்டத்தில் ஈடுபடுவது தெரியவந்தது. 

காவல்துறையின் கண்காணிப்பிலிருந்து தப்பிக்கும் வகையிலும், பந்தயம் வைப்பவர்கள் தொடர்பில் இருப்பதற்கும் வாக்கி - டாக்கி பயன்படுத்தப்பட்டதையும் காவல்துறையினர் கண்டறிந்தனர்.

பின்னர் சூதாட்டத்தில் ஈடுபட்ட 17 பேரை கைது செய்த காவல்துறையினர் செல்போன்கள், தொலைக்காட்சி, ரூ.81,000 ரொக்கப் பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் அவர்கள் மீது பிரிவு 3, 4, 9 மற்றும் 56 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.