மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

உ.பி.யில் இரட்டைக்கொலை: ஒரே குடும்பத்தில் 6 பேருக்கு ஆயுள் தண்டனை

25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இரட்டைக் கொலை வழக்கை விசாரித்து வந்த மாவட்ட நீதிமன்றம், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

News image
இரட்டைக்கொலை: ஒரே குடும்பத்தில் 6 பேருக்கு ஆயுள் தண்டனை
Updated On :10 அக்டோபர் 2020, 7:18 am

PTI

ஹமிர்புர்: 25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இரட்டைக் கொலை வழக்கை விசாரித்து வந்த மாவட்ட நீதிமன்றம், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

சிறப்பு நீதிமன்ற நீதிபதி அனில் குமார், கடந்த 1995ஆம் ஆண்டு, காவல்துறை அதிகாரியின் வாகன ஓட்டுநர் அமர் சிங், மௌதா பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பப்பு ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார். மேலும், அவர்கள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்ததோடு, தலா ரூ.26 ஆயிரம் அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டார்.

பழிக்கு பழி வாங்கும் வகையில் இரு கும்பலுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் அமர் சிங் மற்றும் பப்பு ஆகியோர் குண்டடிப்பட்டு பலியாகினர்.

இந்த வழக்கில் 9 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்த நிலையில், வழக்கு விசாரணையின்போதே 3 பேர் மரணமடைந்துவிட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.