தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மகாராஷ்டிரம்: 'தீபாவளி பண்டிகைக்கு முன்பு பள்ளிகள் திறக்கப்படாது'

தீபாவளிப் பண்டிகைக்கு முன்பு பள்ளிகள் திறக்கப்படாது என்று மகாராஷ்டிர பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :11 அக்டோபர் 2020, 6:58 am

DIN

தீபாவளிப் பண்டிகைக்கு முன்பு பள்ளிகள் திறக்கப்படாது என்று மகாராஷ்டிர பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 16-ஆம் தேதி முதல் அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன.

இதனிடையே தற்போது கரோனா தளர்வால் வரும் அக்டோபர் 15-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே கரோனா தொற்றிலிருந்து குணமடைந்த மகாராஷ்டிர பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட், பள்ளிகளில் இணையவழிக் கல்வி எடுக்கப்பட்டு வருவதாகவும், ஒரு சில இடங்களில் மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.

இதனிடையே இந்தக் கல்வி ஆண்டு முடிவடைந்து மாணவர்களை மதிப்பிடுவதற்கான வழியைக் கண்டுபிடிப்பதே சவால் நிறைந்த பணியாக உள்ளது. எனினும் தீபாவளி பண்டிகைக்கு முன்பு கட்டாயம் பள்ளிகள் திறக்கப்படாது  என்று குறிப்பிட்டார்.

மகாராஷ்டிரத்தில் கரோனா பெருந்தொற்று பரவல் குறையாததால், பள்ளிகள் திறக்க தாமதமாகலாம் என்றும் அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.