சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தில்லியில் சாலை விபத்து: 3 பேர் பலி, ஒருவர் காயம்

தில்லியில் கார் மற்றும் டிராக்டர் மோதிய விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

News image
One killed, two injured in Kupwara road accident
Updated On :12 அக்டோபர் 2020, 6:29 am

ANI

தில்லியில் கார் மற்றும் டிராக்டர் மோதிய விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

ஷாடிபூர் மேம்பாலத்தில் சுமை ஏற்றிவந்த டிரக்டருடன் கார் மோதியுள்ளது. இன்று அதிகாலை 1.30 மணியளவில் நடைபெற்ற இந்த விபத்து தொடர்பாக மோதி நகர் காவல் நிலையத்துக்குத் தகவல் கிடைத்தது என்று தில்லி காவல்துறையினர் தெரிவித்தனர். 

விபத்தில் உயிரிழந்தவர்கள்  ஹராஜேஷ் சர்மா (32), தருண் குப்தா (42) மற்றும் சரந்தீப் சிங் (38) ஆகியோர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்கள் பாண்டவ் நகரில் வசிப்பவர்கள் என்று தெரியவந்துள்ளது. 

மேலும் காயமடைந்தவர்கள் ஜில்மில், சிவம் என்க்ளேவில் வசிக்கும் பர்வீன் சிங் (38) ஆவார். இவர், தில்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். 

விபத்து தொடர்பாக காவல்துறையினர் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகத் தில்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். விபத்தில் சிக்கிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.