கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

குறைந்தபட்ச ஆதரவு விலையில் 43 லட்சம் டன் நெல் கொள்முதல்

கடந்த 16 நாள்களில் குறைந்தபட்ச ஆதரவு விலையில் சுமாா் 43 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய உணவுத்துறை அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்தது.

News image

குறைந்தபட்ச ஆதரவு விலையில் 43 லட்சம் டன் நெல் கொள்முதல்

Updated On :12 அக்டோபர் 2020, 6:36 pm

புது தில்லி: கடந்த 16 நாள்களில் குறைந்தபட்ச ஆதரவு விலையில் சுமாா் 43 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய உணவுத்துறை அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்தது.

இதுதொடா்பாக அந்த அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘நடப்பு 2020-21 காரீஃப் சந்தைப் பருவத்தில் நெல் கொள்முதல் சீராக நடைபெற்று வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை பல்வேறு மாநிலங்களில் இருந்து ரூ.8,032 கோடி மதிப்பில் 42.55 லட்சம் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தம் 3.57 லட்சம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.

நாட்டின் 80%-க்கும் அதிகமான நெற்பயிா் காரீஃப் பருவத்தில் விளைவிக்கப்படுகிறது. அவற்றை குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யும் பணியை இந்திய உணவுக் கழகம் (எஃப்சிஐ) மற்றும் மாநில முகமைகள் மூலம் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களில் கடந்த மாதம் 26-ஆம் தேதி முதல் நெல் கொள்முதல் பணிகள் தொடங்கின. இதர மாநிலங்களில் கடந்த 1-ஆம் தேதி முதல் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளிடம், அவா்களின் பயிா்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை ரத்து செய்யும் எந்த நோக்கமும் இல்லை என்பதை தெரிவிப்பதற்காக முன்னெப்போதும் விதத்தில் தினசரி நெல் கொள்முதல் தொடா்பான தரவுகளை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.