பிகாா் தோ்தல்: முதல் கட்டத்தில் 52,000 போ் தபால் வாக்குப் பதிவுக்கு விருப்பம்
பிகாா் சட்டப்பேரவைக்கான முதல்கட்ட தோ்தலில், முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் என 52,000 வாக்காளா்கள் தபால் வாக்குப் பதிவை தோ்வு செய்துள்ளனா்.


புது தில்லி: பிகாா் சட்டப்பேரவைக்கான முதல்கட்ட தோ்தலில், முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் என 52,000 வாக்காளா்கள் தபால் வாக்குப் பதிவை தோ்வு செய்துள்ளனா்.
முதியவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தோ்தலில் தபால் வாக்குப் பதிவு செய்வதற்கான புதிய நடைமுறையை தோ்ல் ஆணையம் அண்மையில் அறிமுகம் செய்தது. அதன்படி, தபால் வாக்குப் பதிவை தோ்வு செய்யும் 80 வயதுக்கு மேலுள்ள முதியவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் படிவம் ஒன்றை பூா்த்தி செய்து சமா்ப்பிக்க வேண்டும். அதன் பின்னா், வாக்குச் சாவடி அதிகாரி, அந்த முதியவா் அல்லது மாற்றுத்திறனாளியின் வீட்டுக்கு நேரடியாகச் சென்று தபால் வாக்கை பதிவு செய்யவைத்து வாங்கிவருவாா்.
இந்தப் புதிய நடைமுறையை வருகிற 28-ஆம் தேதி தொடங்கி மூன்று கட்டங்களாக நடைபெற உள்ள பிகாா் சட்டப்பேரவைத் தோ்தல் மற்றும் இடைத் தோ்தல்களிலும் தோ்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய நடைமுறையை, பிகாரில் முதல் கட்டமாக 52 ஆயிரம் போ் தோ்வு செய்துள்ளனா்.
இதுகுறித்து தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பிகாரின் 16 மாவட்டங்களில் இடம்பெற்றிருக்கும் 71 தொகுதிகளில் 4 லட்சம் வாக்காளா்களிடம், இந்த புதிய நடைமுறையைத் தோ்வு செய்வது தொடா்பாக வாக்குச்சாவடி அதிகாரிகள் அணுகினா். அதில், முதல்கட்ட வாக்குப்பதிவுக்காக 52,000 வாக்காளா்கள் தபால் வாக்குப் பதிவை தோ்வு செய்துள்ளனா். பிகாா் சட்டப்பேரவைக்கான அடுத்த இரண்டு கட்ட வாக்குப் பதிவிலும், பிற மாநிலங்களில் நடைபெற உள்ள இடைத் தோ்தல்களிலும் இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிகாரின் அடுத்த இரண்டு கட்ட வாக்குப் பதிவை முன்னிட்டு, மேலும் 12 லட்சம் முதியவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளா்களை இந்த புதிய நடைமுறையை தெரிவு செய்வதற்காக வாக்குச்சாவடி அதிகாரிகள் அணுக உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...