ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

விஜயராஜே சிந்தியா நினைவாக ரூ. 100 நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி

மறைந்த பாஜக தலைவர் விஜயராஜே சிந்தியாவின் 100 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவம் பொறித்த ரூ.100 நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.

News image
Updated On :12 அக்டோபர் 2020, 10:04 am

DIN

மறைந்த பாஜக தலைவர் விஜயராஜே சிந்தியாவின் 100 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவம் பொறித்த ரூ.100 நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.

பாஜகவின் முன்னோடியான ஜன சங்கத்தை நிறுவிய தலைவர்களில் ஒருவரான விஜயராஜே சிந்தியாவின் 100 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. 1919 அக்டோபர்  12 ஆம் தேதி பிறந்த அவர், 2001 ஜனவரி 25  ஆம் தேதி மறைந்தார்.

Story image

விஜயராஜேவின் 100 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது நினைவாக, அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். தில்லியில் காணொலி மூலம் நடைபெற்ற இந்த விழாவில், விஜயராஜேவின் குடும்பத்தினர், முக்கிய பாஜக தலைவர்கள் கலந்துகொண்டனர்,. 

விழாவில் பேசிய பிரதமர் மோடி, நாட்டின் சுதந்திரத்திற்குப் பின்னர் பல தசாப்தங்களாக இந்தியாவின் முக்கிய அரசியல் நிகழ்வுகளுக்கு ஒரு சாட்சியாக இருந்தார். கடந்த 60 ஆண்டுகளில், முக்கிய அரசியல் நபர்களில் ஒருவர். அவர் ஒரு தீர்க்கமான தலைவர், திறமையான நிர்வாகி. சுதந்திரத்திற்கு முன்னர் வெளிநாட்டு ஆடைகளை புறக்கணித்ததால் இருந்து ராம் மந்திர் அந்தோலன் வரை அவரது அனுபவம் மிகப்பெரியது. 

       விஜயராஜே சிந்தியா நினைவாக வெளியிடப்பட்ட 100 ரூபாய் நாணயம்        

       விஜயராஜே சிந்தியா நினைவாக வெளியிடப்பட்ட 100 ரூபாய் நாணயம்        

ராம ஜென்மபூமக்காக அவர் போராடியுள்ளார். அவரது நூறாவது பிறந்தநாளில் அவரது கனவும் நனவாகியுள்ளது. அதிகாரத்தை கைப்பற்றுவதைவிட பொது சேவை முக்கியமானது என்பதை நிரூபித்தவர். தனது வாழ்க்கையின் முக்கியமான ஆண்டுகளை சிறையில் கழித்தார். வருங்கால சந்ததியினருக்காக, அவர் பல தியாகங்களைச் செய்துள்ளார்.  பதவி அல்லது புகழுக்காக, அவர் ஒருபோதும் அரசியல் அதிகாரத்தை தேர்வு செய்யவில்லை என்று புகழாரம் சூட்டினார். 

ராஜஸ்தான்  முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, விஜயராஜே சிந்தியாவின் மகள் மற்றும் பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ஜோதிராதித்ய சிந்தியா அவரது பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.