சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

தெலங்கானாவில் மேலும் 1,446 பேருக்கு கரோனா: 8 பேர் பலி

தெலங்கானாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,446 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது. 

News image

தெலங்கானாவில் மேலும் 1,446 பேருக்கு கரோனா: 8 பேர் பலி

Updated On :14 அக்டோபர் 2020, 6:00 am

PTI

தெலங்கானாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,446 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது. 

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ஒடிசாவில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக ஒடிசா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 

புதிதாக 1,446 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,16 லட்சமாக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 23,728 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 1,91 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து, மீட்பு விகிதம் 88.45 ஆக உள்ளது. 

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 8 பேர் உயிரிழந்ததால், இதுவரை மொத்தமாக கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,241-ஆக அதிகரித்துள்ளது. 

மேலும், கடந்த ஒரேநாளில் 40,056 சோதனைகள் செய்யப்பட்ட நிலையில், மாநிலத்தில் இதுவரை 36,64 லட்சம் பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.