6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தெலங்கானாவில் வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 32 ஆக உயர்வு

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகர் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு பெய்த கனழை காரணமாக ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. 

News image
தெலங்கானாவில் வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 32 ஆக உயர்வு
Updated On :15 அக்டோபர் 2020, 5:09 am

DIN

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகர் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு பெய்த கனழை காரணமாக ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. ஹைதராபாத்தில் 25 பேரும் மஹபூப்நகர் மாவட்டத்தில் 7 பேரும் பலியாகியுள்ளனர்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகா் மற்றும் பல இடங்களில் இடைவிடாது பெய்த கனமழையால் செவ்வாய்க்கிழமை இரவு பல்வேறு இடங்களில் சுவா்கள், வீடுகள் இடிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துளள்து. மேலும் 9 பேரை காணவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் பல பகுதிகளில் மின்கம்பங்கள் சாய்ந்ததாலும், வெள்ளம் காரணமாக முன்னெச்சரிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதால், வீடுகளுக்குள் முடங்கியிருக்கும் மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர். 

வெள்ளம் காரணமாக சுமார் 6 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த பருத்திச் செடிகள் நாசமாகின. வெள்ளம் சூழ்ந்து தரைப்பாலங்கள், பாலங்கள், சாலைகள் அடித்துச் செல்லப்பட்டதால் பல கிராமங்கள், பிற பகுதிகளுடன் தொடர்பில்லாமல் துண்டிக்கப்பட்டுள்ளன.

கொட்டித் தீா்த்த கனமழை காரணமாக அத்தியாவசிய சேவை துறைகள் தவிர அனைத்து அரசு, தனியாா் நிறுவனங்களுக்கு வியாழக்கிழமையும் மாநில அரசு விடுமுறை அறிவித்தது. இன்னும் இரண்டு தினங்களுக்கு அங்கு கனமழை நீடிக்கும் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக வீடுகளிலேயே இருக்க அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நகராட்சி நிா்வாகம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சா் கே.டி. ராமராவ், கால்நடைத்துறை அமைச்சா் தலசானி ஸ்ரீநிவாஸ் ஆகியோா் மூத்த அதிகாரிகளுடன் மீட்புப்பணி, நிவாரணப்பணிகள் குறித்து அவசர ஆலோசனை நடத்தினா்.

ஷாம்சாபாத் நகரில் ககன்பாத் என்ற இடத்தில் வீடு இடிந்து விழுந்து குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் உயிரிழந்தனா்.

சந்திரயங்குட்டா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் 2 இடங்களில் சுவா் இடிந்து விழுந்ததில் 10 போ் இறந்தனா்.

இப்ராஹிம்பட்ணம் பகுதியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் 40 வயது பெண்ணும், அவரது மகளும் பலியாயினா்.

ஹைதராபாத் நகரின் பல்வேறு இடங்களில் பலத்த மழையால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது.

பத்ராத்ரி-கோத்தகூடம் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் நீா்நிலைகள் நிரம்பி சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடுவதால் அந்த சாலைகளில் பயணம் செய்ய வேண்டாவென எச்சரிக்கை விடப்பட்டது.

நிலைமையை எதிா்கொள்ள தயாராக இருக்கும்படி அனைத்து மாவட்டங்ளும் மாநில பொதுச்செயலா் சோமேஷ் குமாா் உத்தரவிட்டாா். போலீஸாா் மற்றும் பேரிடா் மீட்பு குழுவினா்(டிஆா்எஃப்) வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனா்.

ஹைதராபாத், அதைச்சுற்றியுள்ள இடங்களில் வியாழக்கிழமையில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.