

தாணேவில் கரோனா பாதிக்கப்பட்டவருக்கு சற்றும் தயக்கமின்றி தனது பிளாஸ்மாவை தானமாக அளித்துள்ளார் உதவி துணை ஆணையர் நட்ராஜேஷ்வர் அந்தல்கர்.
கரோனா பாதித்த நோயாளி ஒருவருக்கு பிளாஸ்மா தேவைப்படும் பட்சத்தில் தாணேவில் உள்ள காவல்துறையை அணுகியுள்ளனர். அதைத் தொடர்ந்து, ஒரு காவல்துறை அதிகாரி உடனே அதற்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
மகாராஷ்டிரத்தில் உள்ள காவல்துறையினர் தனது வாட்ஸ் ஆப் குழுவில் 65 வயதான ஒரு நோயாளிக்கு கரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு பி-பாசிடிவ் பிளாஸ்மா தேவைப்படுவதாக ஒரு செய்தி வந்திருந்தது.
செய்தியைப் படித்த, வயர்லெஸ் பிரிவில் உள்ள உதவி துணை ஆணையர் நட்ராஜேஷ்வர் அந்தல்கர், சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவமனைக்கு விரைந்து சென்று அவரது பிளாஸ்மாவை தானம் செய்துள்ளார் என்று தாணே நகர காவல்துறையினர் புதன்கிழமை சுட்டுரையில் பதிவிட்டுள்ளனர்.
ஐ.எஸ்.ஐ.யின் இந்த மனிதாபிமானத்தை காவல்துறையினர் வெகுவாக பாராட்டியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.