ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

கரோனா உள்ள பெண்ணுக்கு பிறந்த ஆரோக்கியமான குழந்தை

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிறந்த குழந்தை ஆரோக்கியமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

News image

கரோனா உள்ள பெண்ணுக்கு பிறந்த ஆரோக்கியமான பெண் குழந்தை பிறந்தது (கோப்புப்படம்)

Updated On :17 அக்டோபர் 2020, 7:55 am

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிறந்த குழந்தை ஆரோக்கியமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் கரோனா என்ற பெயருடைய கர்ப்பிணிப் பெண் மகப்பேறு பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

அவருக்கு அக்டோபர் 25-ஆம் தேதி மகப்பேறு முடிந்து குழந்தை பிறக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்த நிலையில், காய்ச்சல், தலைவலி மற்றும் வாந்தியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், கரோனா பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தினார். இதனையடுத்து கரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

பிறகு அவர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று (வியாழக்கிழமை) இரவு அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தாய், சேய் ஆகிய இருவரும் ஆரோக்கியமாக உள்ளதாகவும், குழந்தைக்கு கரோனா இல்லை ஆரோக்கியமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.