தில்லியில் இன்று புதிதாக 3,259 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தில்லி சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், இன்று புதிதாக 3,259 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து, நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்களின் மொத்த எண்ணிக்கை 3,27,718-ஆக உயா்ந்துள்ளது. நோய்த் தொற்றால் இன்று 35 போ் பலியாகியுள்ளனா். இதனால், மொத்த பலி எண்ணிக்கை 5,981-ஆக அதிகரித்துள்ளது. நோய் பாதிப்பில் இருந்து இன்று 3,154 போ் மீண்டுள்ளனா்.
இதனால், குணமடைந்தோா் எண்ணிக்கை 2,98,853-ஆக அதிகரித்தது. தற்போது தில்லியில் மொத்தம் 22,884 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். ஒரே நாளில் இன்று மொத்தம் 55,715 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 15,537 பேருக்கும், ‘ரேபிட் ஆன்டிஜென்’ வகையில் 40,178 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
தில்லி மருத்துவமனைகளில் மொத்தம் உள்ள 15,706 படுக்கைகளில் 5,028 படுக்கைகள் நிரம்பியுள்ளன. 10,678 படுக்கைகள் காலியாக உள்ளன. தில்லியில் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 2,751-ஆக அதிகரித்துள்ளது. நோய்த் தொற்றுப் பாதித்தவா்களில் 13,436 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு குணமடைந்து வருவதாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு: யாருக்கு லாபம்?

விவசாயிகளின் கனவு: சுசீந்திரம் பழையாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்படுமா?
உதகை தொகுதியில் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறுமா காங்கிரஸ்?

கா்நாடக துணை முதல்வருடன் ஸ்டாலின் பிரசாரம் செய்வது துரோகம்: எடப்பாடி பழனிசாமி பேச்சு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


