ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

ஆக்ராவில் பட்டாசு ஆலையில் தீவிபத்து: 2 பேர் பலி, 4 பேர் காயம்

ஆக்ராவில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 2 பேர் பலியானார்கள்.

News image

கோப்புப் படம்.

Updated On :18 அக்டோபர் 2020, 3:27 pm

ஆக்ராவில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 2 பேர் பலியானார்கள்.

உத்தரப் பிரதேசம், ஆக்ராவின் நியூ ஆசம் பாதா பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று தீவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு எட்டு ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. இந்த விபத்தில் 2 பேர் பலியானார்கள். 4 பேர் காயமடைந்தனர். 

உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் ரோஹகன் பிரமோத் கூறுகையில், விபத்துக்குள்ளான பட்டாசு ஆலை ஷாமேன் மன்சூரிக்கு சொந்தமானது. பணி நடந்துகொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 

எனினும், அனுமதி பெற்று பட்டாசு ஆலை இயங்கியதா என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.