தில்லி: பிளாஸ்மா சிகிச்சை மூலம் 2 ஆயிரம் பேருக்கு மறுவாழ்வு

தில்லியில் பிளாஸ்மா சிகிச்சையின் மூலம் 2 ஆயிரம் பேர் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.
தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயின்  (கோப்புப்படம்)

கரோனா சிகிச்சைக்கான நெறிமுறைகளிலிருந்து பிளாஸ்மா சிகிச்சையை அகற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முடிவு குறித்து தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார். 

அப்போது பேசிய அவர், கரோனா பெருந்தொற்று பரவி வரும் நிலையில், பிளாஸ்மா சிகிச்சையின் மூலம் நான் உள்பட 2 ஆயிரம் பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர். மேலும், அமெரிக்காவும் பிளாஸ்மா சிகிச்சை பலனளிப்பதாகத் தெரிவித்துள்ளது.

இதனை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com