மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தாயை துன்புறுத்தி வந்த தந்தையை அடித்துக் கொன்ற மகள்

தாயை தொடர்ந்து துன்புறுத்தி வந்த தந்தையை அடித்துக் கொன்ற 16 வயது மகள் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

News image
தாயை துன்புறுத்தி வந்த தந்தையை அடித்துக் கொன்ற மகள்
Updated On :22 அக்டோபர் 2020, 9:52 am

DIN


போபால்: தாயை தொடர்ந்து துன்புறுத்தி வந்த தந்தையை அடித்துக் கொன்ற 16 வயது மகள் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

பிகார் மாநிலம் போபாலில், புதன்கிழமை மாலை இந்த சம்பவம் நடந்துள்ளது. 16 வயது மகள் தனது 45 வயது தந்தையை, துணிகளைத் துவைக்கப் பயன்படுத்தப்படும் மட்டையைக் கொண்டு அடித்துக் கொன்றுள்ளார்.

தினமும் குடித்துவிட்டு வந்த தாயைத் துன்புறுத்தி வந்த தந்தையை, ஆத்திரத்தில் மகளே அடித்துக் கொன்றிருப்பதாக காவல்துறை அதிகாரி கே.கே. வெர்மா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், வேலையில்லாமல் இருந்த தந்தையால் அந்த குடும்பம் வறுமையில் இருந்துள்ளது. அவர்களது மூத்த மகன் மட்டுமே கட்டட வேலை செய்து பணமீட்டிவந்துள்ளார். இதற்கிடையே, தந்தை தினந்தோறும் குடித்துவிட்டு வந்து தாயை துன்புறுத்தி வந்தால் பிள்ளைகளும் கடும் அதிருப்தியில் இருந்துள்ளனர். புதன்கிழமை மாலையும் அதுபோல நடக்கவே, கோபத்தில், மகள் மட்டையை எடுத்து தந்தையின் தலையில் அடிக்க, அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

உடனடியாக காவல்நிலையத்தைத் தொடர்பு கொண்ட மகள் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். அவர் 18 வயது நிறைவடையாதவர் என்பதால், சிறார் சிர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளார். விசாரணை நடைபெற்று வருகிறது என்று கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.