வருமானவரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு டிச.31 வரை நீட்டிப்பு

வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு, தணிக்கை அறிக்கைகள் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஆகியவை நீட்டிக்கப்பட்டுள்ளன.
வருமானவரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு
வருமானவரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு


புது தில்லி: வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு, தணிக்கை அறிக்கைகள் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.

கரோனா பெருந்தொற்று காரணமாக, வரி செலுத்துவோர் வருமானவரி சட்டம் மற்றும் ஒழுங்குமுறைகளை மேற்கொள்வதில் சவால்களை சந்தித்து வருவதால் வரிவிதிப்பு மற்றும் பிற சட்டங்கள்(சில விதிகளில் தளர்வுகள் அளிக்கும்) அவசரச் சட்டம் 2020 (‘அவசரச் சட்டம்’) கடந்த 2020 மார்ச் 31-ம் தேதி கொண்டு வரப்பட்டது.

அதன்படி பல்வேறு விஷயங்களில் காலவரம்புகள் நீடிக்கப்பட்டன. இந்த அவசரச் சட்டத்துக்குப் பதில், வரிவிதிப்பு மற்றும் பிற சட்டங்கள் (சில விதிகளில் தளர்வுகள் அளிக்கும்) சட்டம் கொண்டு வரப்பட்டது.

அவசரச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு கடந்த 2020 ஜூன் 24-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், நிதியாண்டு மதிப்பீடு ஆண்டு 2019-20-க்கான அனைத்து விதமான வரிசெலுத்துவோருக்கான காலக்கெடு 2020 நவம்பர் 30-வரை நீடிக்கப்பட்டது. எனவே 2020ம் ஆண்டில் ஜூலை 31, அக்டோபர் 31 ஆகிய தேதிகளில் தாக்கல் செய்யப்பட வேண்டிய வருமான வரி 2020 நவம்பர் 30ம் தேதி தாக்கல் செய்ய வேண்டிய தேவை எழுந்தது. 

இதன் தொடர்ச்சியாக வரி தணிக்கை அறிக்கை உள்ளிட்ட பல்வேறு தணிக்கை அறிக்கைகளை தாக்கல் செய்வது வருமான வரி சட்டம்,1961-ன் கீழ் 2020 அக்டோபர் 31-வரை நீடிக்கப்பட்டது.

வருமான வரி தாக்கல் செய்வதற்கு வரி செலுத்துவோருக்கு மேலும் கால அவகாசம் வழங்கும் வகையில், கீழ்கண்ட வருமான வரி தாக்கல் செய்வோருக்கான காலக்கெடு மேலும் நீடிக்கப்படுகிறது.

(அ) தங்களின் கணக்குகள் தணிக்கை செய்ய வேண்டிய தேவை இருக்கும் வரிசெலுத்துவோருக்கான (அவர்களின் பங்குதாரர்கள் உட்பட) வருமான வரித்தாக்கல் காலக்கெடு (அவர்களுக்கான காலக்கெடு, கூறப்பட்ட அறிவிப்பில் நீடிப்பதற்கு முன்பு) 2020 அக்டோபர் 31- சட்டத்தின்படி) 2021 ஜனவரி 31-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

(ஆ) தங்களின் சர்வதேச / குறிப்பிட்ட உள்ளூர் பரிமாற்றங்கள் குறித்து அறிக்கைகள் தாக்கல் செய்ய வேண்டிய தேவை இருக்கும் வரிசெலுத்துவோருக்கான வருமான வரித்தாக்கல் காலக்கெடு 2021 ஜனவரி 31-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

(இ) இதர வரி செலுத்துவோருக்கான வருமானவரி செலுத்துவதற்கான காலக்கெடு 2020 டிசம்பர் 31-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, வரி தணிக்கை அறிக்கை மற்றும் சர்வதேச / குறிப்பிட்ட உள்ளூர் பரிமாற்றங்கள் உள்ளிட்ட சட்டத்தின் கீழ் வரும் பல்வேறு தணிக்கை அறிக்கைகள் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு 2020 டிசம்பர் 31-வரை நீடிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com