6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

“பள்ளிகள் திறப்பு இப்போது சாத்தியமில்லை”: தில்லி முதல்வர் கெஜ்ரிவால்

தில்லியில் பள்ளிகள் திறப்பு தற்போது சாத்தியமில்லை என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சனிக்கிழமை தெரிவித்தார்.

News image
தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
Updated On :24 அக்டோபர் 2020, 2:01 pm

DIN

தில்லியில் பள்ளிகள் திறப்பு தற்போது சாத்தியமில்லை என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சனிக்கிழமை தெரிவித்தார்.

கரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும், பள்ளிகளும் மார்ச் 16 முதல் மூடப்பட்டுள்ளன. 

பல்வேறு கட்டங்களில் பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும், கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. தில்லியில் அக்டோபர் 31 வரை கல்வி நிலையங்கள் மூடப்படும் என அறிவித்திருந்தது.

இந்நிலையில் சனிக்கிழமை பேசிய தில்லி முதல்வர் கெஜ்ரிவால் கரோனா தொற்று காரணமாக தற்போதைய சூழலில் கல்வி நிலையங்களைத் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.