அக்.27ல் திருமாவளவனைக் கண்டித்து போராட்டம்: எல்.முருகன்
திருமாவளவனைக் கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் வரும் செவ்வாய்க்கிழமை அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெறும்


திருமாவளவனைக் கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் வரும் அக்டோபர் 27 ஆம் தேதி(செவ்வாய்க்கிழமை) அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெறும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், மருத்துவப் படிப்பில் 7.5% உள்இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. ஆளுநர் எடுத்துக்கொண்ட நேரம் போதுமானது, 7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் தர வேண்டும்.
திருமாவளவனைக் கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் வரும் செவ்வாய்க்கிழமை அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் போராட்டம் நடைபெறும்.
அதேபோன்று தமிழகத்தில் பாஜக சார்பில் வெற்றிவேல் யாத்திரை விரைவில் தொடங்கவுள்ளது. தமிழகத்தில் நவம்பர் 6 முதல் டிசம்பர் 6 வரை வெற்றிவேல் யாத்திரை நடைபெறும். யாத்திரையில் மத்திய அமைச்சர்கள் கலந்துகொள்வார்கள் என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...