சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

மதுராவில் சாலை விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

உத்தரப் பிரதேசத்தின், மதுரா மாவட்டத்தின் மஹாபன் பகுதியில் உள்ள யமுனா அதிவேக நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

News image

BJP Kisan Morcha leader killed in road accident

Updated On :28 அக்டோபர் 2020, 10:07 am

PTI

உத்தரப் பிரதேசத்தின், மதுரா மாவட்டத்தின் மஹாபன் பகுதியில் உள்ள யமுனா அதிவேக நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

தில்லியில் இருந்து ஆக்ரா நோக்கி செல்லும் கார் நெஞ்சாலையில் நின்றுகொண்டிருந்த, காரின் மீது வேகமாக வந்த மற்றொரு கார் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்தனர். 

விபத்தில் காயமடைந்த ஓட்டுநர் பஞ்சாபின் அமிர்தசரஸில் உள்ள குர்னாம் நகரில் வசிக்கும் குல்தீப் என அடையாளம் காணப்பட்ட நிலையில் அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இறந்தவர்கள் 55 வயதான தரம்வீர் சிங் ராணா, அவரது மனைவி உஷா மற்றும் அவரது மகன் அவினாஷ் ராணா, ஹரியானாவின் குர்கானில் உள்ள ராஜீவ் நகரில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. பரபரப்பான நெடுஞ்சாலையில் போக்குவரத்து சரிசெய்யப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.