மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்களுக்காக எனது தோழி திட்டம் தொடக்கம்

பெண் பயணிகளின் பாதுகாப்புக்கு 'எனது தோழி' நடவடிக்கையை தொடங்கியது இந்திய ரயில்வே. இந்த திட்டத்தின் கீழ் அவசரத் தேவைக்கு ‘182’ என்ற எண்ணுக்கு போன் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
ரயில்வே ஊழியர்களுக்கு பண்டிகைக் கால போனஸ் அறிவிப்பு
Updated On :30 அக்டோபர் 2020, 10:05 am

DIN

புது தில்லி: பெண் பயணிகளின் பாதுகாப்புக்கு 'எனது தோழி' நடவடிக்கையை தொடங்கியது இந்திய ரயில்வே. இந்த திட்டத்தின் கீழ் அவசரத் தேவைக்கு ‘182’ என்ற எண்ணுக்கு போன் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயிலில் பயணிக்கும் பெண் பயணிகளுக்கு, புறப்படும் ரயில் நிலையத்திலிருந்து, சென்றடையும் ரயில் நிலையம் வரை பாதுகாப்பு அளிக்கும் நோக்கில், ‘எனது தோழி' நடவடிக்கையை இந்திய ரயில்வே தொடங்கியுள்ளது.

ரயிலில் பயணம் செய்யும் பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக ‘எனது தோழி’ நடவடிக்கை தென் கிழக்கு ரயில்வேயில் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதற்கு பெண் பயணிகளிடம் வரவேற்பு கிடைத்ததால், இந்த நடவடிக்கை அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

ரயில்வே பாதுகாப்பு படையின் முன்முயற்சியில் தொடங்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை மூலம், ரயில் பயணம் செய்யும் பெண் பயணிகள், குறிப்பாக தனியாக பயணம் செய்பவர்களிடம், ரயில்வே பாதுகாப்பு படை பெண் காவல்துறையினரை தொடர்பு கொண்டு பயணத்தின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துரைப்பர். பயணத்தின் போது ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், 182 என்ற போன் செய்து தகவல் தெரிவிக்கும்படியும் கூறுவர்.

ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினர் (ஆர்பிஎஃப்), பெண் பயணிகளின் இருக்கை எண், ரயில் பெட்டி எண் ஆகியவற்றை சேகரித்து, ரயில் நிற்கும் இடங்களில் பாதுகாப்பு பணியில் உள்ள ஆர்பிஎப் காவல்துறையினருக்கு தெரிவிப்பர். அவர்கள், சம்பந்தப்பட்ட பெண் பயணிகளை கண்காணிப்பர். தேவைப்பட்டால், பெண் பயணிகளை தொடர்பு கொண்டு பேசுவர். ரயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ரயில்வே பாதுகாப்பு படை காவலர்கள் / மாநில ரயில்வே காவலர்களும் தனியாக பயணம் செய்யும் பெண் பயணிகளுக்கான பாதுகாப்பை வழங்குவர்.

சேர வேண்டிய இடம் வந்ததும், பெண் பயணிகளிடம் பாதுகாப்பு பற்றி கருத்துகளை ஆர்பிஎப் குழுவினர் சேகரிப்பர். இந்த கருத்துகள் பரிசீலிக்கப்பட்டு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். ‘‘எனது தோழி’’ நடவடிக்கையின் கீழ் உள்ள ரயில்களில் பயணம் செய்யும் பெண் பயணிகளிடமிருந்து வரும் அவசர அழைப்புகளை மூத்த அதிகாரிகளும் கண்காணிப்பர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.