பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!ராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் குருத்தோலை பவனி!
/

இந்தியாவில் இன்று 69,921 பேருக்கு கரோனா பாதிப்பு 

இந்தியாவில் இன்று காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 69,921 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 37 லட்சத்தை நெருங்குகிறது.

News image

இந்தியாவில் இன்று 69,921 பேருக்கு கரோனா பாதிப்பு

Updated On :1 செப்டம்பர் 2020, 4:27 am

ANI


இந்தியாவில் இன்று காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 69,921 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 37 லட்சத்தை நெருங்குகிறது.

நாட்டில் கரோனா தொற்று பரவல் குறித்த விவரங்களை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

அதில், நாட்டில் இன்று ஒரே நாளில் 69,921 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்தவர்களில் 819 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 36,91,167 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் தற்போது கரோனா பாதித்து 7,85,996 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களில் இதுவரை 28,39,882 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனா பாதித்தவர்களில் 65,288 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.