2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

பல்கலைக்கழக இறுதித் தேர்வு: அக்டோபர் 10 ஆம் தேதி வரை நீட்டிக்க ஒடிசா அரசு கோரிக்கை

பல்கலைக்கழக இளங்கலை மற்றும் முதுகலை இறுதித் தேர்வுகளுக்கான காலக்கெடுவை அக்டோபர் 10ஆம் தேதி வரை நீட்டிக்குமாறு பல்கலைக்கழக மானியக் குழுவை ஒடிசா மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

News image
பல்கலைக்கழக இறுதித் தேர்வு: அக்டோபர் 10 ஆம் தேதி வரை நீட்டிக்க ஒடிசா அரசு கோரிக்கை
Updated On :2 செப்டம்பர் 2020, 12:25 pm

DIN

பல்கலைக்கழக இளங்கலை மற்றும் முதுகலை இறுதித் தேர்வுகளுக்கான காலக்கெடுவை அக்டோபர் 10ஆம் தேதி வரை நீட்டிக்குமாறு பல்கலைக்கழக மானியக் குழுவை ஒடிசா மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

கரோனா பாதிப்பால் ஒத்தி வைக்கப்பட்டிருந்த பல்கலைக்கழக இளங்கலை மற்றும் முதுகலை இறுதித் தேர்வுகளை செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க மாநில அரசுகளை பல்கலைக்கழக மானியக் குழு கேட்டுக் கொண்டிருந்தது.

இந்நிலையில் ஒடிசா மாநில அரசு யூஜிசிக்கு புதன்கிழமை எழுதிய கடிதத்தில் அக்டோபர் 10 வரை பல்கலைக்கழக இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டுத் தேர்வுகளை நடத்தும் காலக்கெடுவை நீட்டிக்கக் கோரியுள்ளது.

குறைந்தபட்சம் ஒரு நாள் இடைவெளியுடன் தேர்வுகளை திட்டமிடுவதை உறுதி செய்ய ஒடிசா அரசு இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதன் மூலம், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேர்வு மையங்களை முறையாக சுத்தப்படுத்த முடியும் என்று மாநில உயர் கல்வித் துறை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.